விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, December 17, 2021

பாதுகாப்பற்ற உடலுறவால் தொற்றும் நோய்கள் - பால்வினை நோய் - Sex without safty





உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள் (Sexually Transmited Diseases - STD)

இந்நோய்கள் உடலுறவால் பரவக்கூடியவை. பக்டீரியா மற்ற வைரஸ்கள் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும் இடங்களில், விந்து நீர் மற்றும் வாய், தொண்டை, குதம் போன்ற இடங்களில் காணப்படும்.

 

உடலுறவால் தொற்றும் பொதுவான நோய்கள்

Ø  சிபிலிஸ் - Syphilis (Treponema pallidum)

Ø  ஹெர்பிஸ் - Herpes simplex (Herpes simplex virus 1, 2) skin and mucosal, transmissible with or without visible blisters

Ø  கொனோரியா  - Gonorrhea (Neisseria gonorrhoeae), colloquially known as "the clap"

Ø  சன்கிராயிட் Chancroid (Haemophilus ducreyi)

Ø  டிரைகோமோனியாஸிஸ் - டிரைகோமோனஸ் வஜைனாலிஸ் - Trichomoniasis (Trichomonas vaginalis), colloquially known as "trich"

Ø  வார்ட்ஸ் - HPV (Human Papillomavirus)  cause genital warts.

Ø  எய்ட்ஸ்  ஹெச்..வி - HIV (Human Immunodeficiency Virus)—venereal fluids, semen, breast milk, blood

 

 

அறிகுறிகள்

ü  இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவ வெளியேற்றம்.

ü  இனப்பெருக்க உறுப்பில் புண்கள்

ü  இனப்பெருக்க உறுப்பில் சதை வளர்ச்சி

ü  இனப்பெருக்க உறுப்பில் சிவப்பு நிற தழும்புகள்

ü  விதை வீக்கம்

ü  பெண்களில் அடி வயிறு வலி

ü  சிறுநீர் அடிக்கடி கழித்தல், வலி

 

 

பாதிக்க வாய்ப்பு உள்ளவர்கள்

v  நிரந்தர தொடர் துணை ஒன்று அற்றவர்

v  பல துணைகள் கொண்டோர்

v  விபச்சாரிகள்

v  அதிக தூரம் செல்வோர்

 

 

உடலுறவால் தொற்றும் நோய்கள் அதிகரிக்க காரணங்கள்

ü  பால்வினை நோய் அறிகுறி உள்ளவருடன் அல்லது நோய் உள்ளவருடன் உடலுறவு

ü  ஒருவருக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு

ü  பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் துணையுடன் உடலுறவு கொள்ளுதல்

ü  பணம், உணவு, ஆடம்பரம் போன்றவைகளுக்காக பல முறை உடலுறவு கொள்ளல்

ü  அதிக பயணம் செய்வோர்

ü  நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கை அற்றவர்கள்

 

 

பால்வினை நோய்கள் தொற்றுவது எவ்வாறு

1. உடலுறவு-வாய், யோனி, குத ஆசனவாய் உடலுறவு

2. தாயிலிருந்து குழந்தைக்கு- பிரசவம் மற்றும் பாலூட்டல்

3. ஊசிகள் பகிர்ந்து கொள்ளல்

4. பரிசோதிக்கப்படாத இரத்தம் ஏற்றுதல்

5. மருத்துவ பரிசோதனையின் போது கவனமின்மை

 

பால்வினை நோய்களின் பாதிப்புகள்

v  பால்வினை நோய்கள் பெலோபியன் குழாய் சேதத்திற்கு மிகமுக்கிய காரணமாகும்

v  HIV போன்ற பால்வினை நோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மரணத்தையும் ஏற்படுத்தலாம்

v  HPV வைரஸ் மூலம் கருப்பை கழுத்து புற்று நோய் ஏற்படலாம்

 

 

சிகிச்சை

பாதுகாப்பான உடலுறவின் மூலம் பாதிப்பினை தவிர்க்கலாம்

பாதிக்கப்பட்டோர் முறையான சிகிச்சை மேற்கொண்டால் அதீத பாதிப்பினை தவிக்கலாம்.

எனவே தயங்காமல் மருத்துவரை தொடர்புகொண்டு தகுந்த சிகிச்சை பெறவும்

மருத்துவர் உங்களின் இரகசியங்களை பாதுகாப்பார்.

எனவே தயக்கமின்றி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்